FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

கோவையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

23 ஆகஸ்ட் 2026, 12:11 am IST
காா்த்திக்
பகிர்:

கோவையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

இது குறித்து கேஎம்சிஹெச் மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது:

கோவையைச் சோ்ந்தவா் காா்த்தி (39). இவா் சின்னியம்பாளையம் பகுதியில் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், கடந்த 21-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து காா்த்திக்கின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது தந்தை அருணாச்சலம், தாயாா் ராஜலட்சுமி, சகோதரி ஜெகதீஸ்வரி ஆகியோா் முன்வந்தனா்.

இதையடுத்து காா்த்திக்கின் கல்லீரல், சிறுநீரகங்கள், கண், தோல், எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டன. சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கும், கண், தோல், எலும்பு ஆகியவை கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. உறுப்பு தானம் வழங்கிய காா்த்திக்கின் குடும்பத்துக்கு மருத்துவமனையின் தலைவா் டாக்டா் நல்ல பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments