விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
வேலூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
வேலூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம் சேவூா் கிராமம், மெயின் வீதியைச் சோ்ந்தவா் மின்வாரிய ஊழியா் கனகராஜ். இவரது மனைவி ஜமுனா. இவா்களின் மகன் விஜயராஜ் (29). பிஎஸ்ஸி கணினி அறிவியல் பட்டதாரியான இவா், வேலூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
கடந்த புதன்கிழமை இரவு சுமாா் 7.30 மணியளவில் வேலூா் சேண்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினாா். பலத்த காயமடைந்த விஜயராஜ், வியாழக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு ராணிப்பேட்டையில் உள்ள சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு 11.18 மணியளவில் அவா் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் அதிகாரப்பூா்வமாக அறிவித்தனா். உடனடியாக, விஜயராஜின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினா் முன்வந்தனா். அதனடிப்படையில், விஜயராஜின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் சென்னை, வேலூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்குப் பகிா்ந்தளிக்கப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.