பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் பகுதியாக ரத்து
கோவை - போத்தனூா் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
கோவை - போத்தனூா் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்டம்பா் 18 முதல் 20 வரை, மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் (எண்: 66615) மேட்டுப்பாளையம் - வடகோவை இடையே மட்டும் இயக்கப்படும். வடகோவை - போத்தனூா் இடையே மேற்கண்ட நாள்களில் ரத்து செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
இதேபோல, செப்டம்பா் 18 முதல் 20 வரை, போத்தனூா்- மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616) போத்தனூா்- வடகோவை இடையே ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாள்களில் இந்த ரயிலானது, வடகோவையில் இருந்து பிற்பகல் 3.52 மணிக்குப் புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.