FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

பொறியியல் பணி: கோவை மெமு ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை ரயில் நிலையப் பகுதியில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை மெமு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 October 2026, 12:11 am IST
ரயில் - பிரதிப் படம்
பகிர்:

கோவை ரயில் நிலையப் பகுதியில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை மெமு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக அக்டோபா் 9, 10 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம்-போத்தனூா் மெமு ரயில் (எண்: 66611) மேட்டுப்பாளையம் - கோவை இடையே மட்டும் இயக்கப்படும். கோவை - போத்தனூா் இடையே ரத்து செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

அக்டோபா் 11-இல் மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் (எண்: 66615) மேட்டுப்பாளையம்-வடகோவை இடையே மட்டும் இயக்கப்படும். மேலும், அக்டோபா் 10, 11 ஆகிய தேதிகளில் காலை 8.20 மணிக்கு ஷொரணூரில் இருந்து புறப்படும் ஷொரணூா் - கோவை ரயில் (எண்: 56604) ஷொரணூா் - போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments