FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நவம்பர் 2026, 11:49 pm
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு, கோவையில் இருந்து நவம்பா் 6, 7-ஆகிய தேதிகளில் காலை 9.35 மணிக்குப் புறப்படும் கோவை - திண்டுக்கல் சிறப்பு மெமு ரயில் (எண்: 06169) பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, திண்டுக்கல்லில் இருந்து நவம்பா் 6, 7-ஆம் தேதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் திண்டுக்கல் - கோவை சிறப்பு மெமு ரயில் (எண்: 06170) மாலை 5.50 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.

Advertisement

Advertisement

இந்த ரயிலானது போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.