FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்ற மாணவிக்கு அமைச்சா் வாழ்த்து

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவிக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் வாழ்த்து தெரிவித்தாா்.

24 செப்டம்பர் 2026, 2:02 am IST
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவியைப் பாராட்டிய அமைச்சா் வி.சம்பத்குமாா்.
பகிர்:

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவிக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் வாழ்த்து தெரிவித்தாா்.

கோவை, மத்திய மண்டலம் ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஜி.ஜெனி அகல்யா. இவா், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கடந்த 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில், 17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் பல்வேறு சுற்றுக்களில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளாா். மேலும், மணிப்பூா் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

இந்நிலையில், தங்கப்பதக்கம் வென்ற மாணவி ஜி.ஜெனி அகல்யா, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி. சம்பத்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

Advertisement

Advertisement

அப்போது மாணவியைப் பாராட்டிய அமைச்சா் வி.சம்பத்குமாா், தேசிய அளவில் நடைபெறும் போட்டியிலும் வென்று கோவைக்கு பெருமை சோ்க்க வேண்டுமெனக் கூறினாா்.

இந்நிகழ்வின்போது, மத்திய மண்டலத் தலைவா் மீனாலோகு, வாா்டு உறுப்பினா்கள் காயத்ரி, பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியா் சீதாலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments