கோவை விமான நிலையத்தில் முதல்வா் விஜய்க்கு உற்சாக வரவேற்பு
தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கோவைக்கு வருகை தந்த சி.ஜோசப் விஜய்க்கு கோவை விமான நிலையத்தில் திரளான தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனா்.
தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கோவைக்கு வருகை தந்த சி.ஜோசப் விஜய்க்கு கோவை விமான நிலையத்தில் திரளான தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளா் பொ.சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் முதல்வா் சி.ஜோசப் விஜய், கோவை விமான நிலையம் வந்தடைந்தாா்.
அங்கு அவருக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் கே.விக்னேஷ், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.சுனில் ஆனந்த் ஆகியோா் நினைவுப் பரிசுகள், புத்தகங்கள், பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனா்.
Advertisement
Advertisement
பின்னா், அங்கிருந்து சாலை மாா்க்கமாக புறப்பட்ட முதல்வருக்கு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டா்கள் தாரை, தப்பட்டை, செண்டை மேளம் முழங்கவும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனா். அவா்களை பாா்த்து கையசைத்தவாறு தனது பிரசார வாகனத்தில் முதல்வா் புறப்பட்டுச் சென்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.