FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காரமடை நகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பி.எஃப். கையாடல்! அரங்கநாதர் கோயில் முன்பு பிச்சை எடுத்து போராட்டம்!

காரமடை நகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பி.எஃப். கையாடல் செய்யப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்...

பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள்.
பகிர்:

காரமடை நகராட்சி ஒப்பந்தர் தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்த பி.எஃப் பணத்தை கையாடல் செய்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பணியாளர்கள் அரங்கநாதர் கோவில் முன்பு பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் நூற்றுக்கு மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள்.

தினக்கூலி அடிப்படையில் மாதந்தோறும் ஊதியம் பெறும் பணியாளர்களிடம் ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொழிலாளர் வைப்பு நிதியை முறையாக தொழிலாளர் நல அலுவலகத்தில் கட்டாமல் கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ஊதியத்தை இதுவரை கட்டாமல் காலம் கடத்தி வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க பலமுறை புகார் தெரிவித்தும் பிடித்தம் செய்த தொகையை இதுவரை கட்டவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த காரமடை நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் இன்று (செப். 30) தங்களிடம் பிடித்தம் செய்த தொகையை ஏமாற்றியதை வெளியே தெரியப்படுத்தவும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அரகநாதர் கோயில் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள்.

நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என தொழிலாளர்கள் கோயில் வளாகத்தின் முன்பு அமர்ந்து கொண்டு கோயிலுக்கு வருபவர்கள், சாலைகளில் செல்வோரிடம் தங்களின் நிலையை எண்ணி பிச்சை அளிக்கும் படி கேட்டு போராட்டம் நடத்தினர்.

பணியாளர்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக நகர்மன்ற உறுப்பினர் விக்னேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

summary

The Karamadai municipal contractor took action in front of the Aranganathar temple demanding action against the contractor for handling the PF money deducted from their wages.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments