FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாரியூரில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம் பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் வகையறா ஆதி நாராயணப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம் பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் வகையறா ஆதி நாராயணப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.

 செப்டம்பர் 24-ஆம் தேதி (வியாழக்கிழமை) வாஸ்து சாந்தியுடன் விழா தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை திருக்கொடியேற்றம், யாகசாலை கும்பஸ்தாபனம், நித்ய ஹோமம் ஆகியன நடைபெற்றன. 26-ஆம் தேதி காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு நித்ய திருவாராதனம், பால தீர்த்தம், 7 மணிக்கு யாகசாலை நித்ய ஹோமம், 10.30 மணிக்கு மாலை மாற்றுதல், பகல் 12.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், தீபாராதனை, சாற்றுமறை, தீர்த்தம், பிரசாதம் வழங்குதல், 1 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு யாகசாலை நித்ய ஹோமம், 6 மணிக்கு சுவாமி திருவீதி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 27-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பால் தீர்த்தம், பகல் 11 மணிக்கு சாற்றுமறை, மாலை 5.30 மணிக்கு பெருமாள் புஷ்ப பல்லக்கில் திருவீதி புறப்பாடு, 28-ஆம் தேதி காலை 9 மணிக்கு திருக்கொடியிறக்கம் ஆகியன நடைபெறவுள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார், உதவி ஆணையர் ப.முருகையா, செயல் அலுவலர் ரா.மாலா ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments