சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரக்கன்றுகள் விநியோகம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இலவச மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இலவச மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இம்பாக்ட் சிறுகடன் நிறுவனம், தமிழகம் முழுதும் 10,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தைச் செயல்படுத்தியது.
நீலகிரி மாவட்டத்தில் கரன்சி, கிளண்டேல், கரன்சி, முள்ளிக்கொரை, முத்தொரை பாலடா, தலையாட்டுமந்து பகுதிகளிலும், நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளி, நஞ்சநாடு முதியோர் இல்லம், உதகை அரசினர் காது கேளாதோர் பள்ளி, தலையாட்டுமந்து அரசு தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் முதல்கட்டமாக 200 மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் இம்பாக்ட் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் பினு சகாரியா, முதன்மை உதவி மேலாளர் ஜெயராஜ், நீலகிரி மாவட்ட கிளை மேலாளர் கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.