மொடக்குறிச்சியில் கிராமசபைக் கூட்டம்
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 23 ஊராட்சிகளில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 23 ஊராட்சிகளில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், சாவடிப்பாளையம்புதூர் பகுதி பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தர வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர். அதிகாரிகள் மனு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். தொடர்ந்து, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது.
இதேபோல, அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்ற கூட்டத்தில், நியாயவிலைக் கடைகள் குறித்தும், சுகாதாரம், மின்சார வசதி, இலவச வீடு கட்டும் திட்டம், குடிநீர் விநியோகம் குறித்தும் பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பப்பட்டன.
ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு தலைமையில் விவசாயிகள் கலந்துகொண்டு மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க அரசு அனுமதிக்கக் கூடாது என்று மனு அளித்தனர். அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்தனர். இதேபோல, பல்வேறு ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.