FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எழுமாத்தூர், கனககிரி மலைப்பாதையில் ரூ.1.85 கோடியில் புதிய தார் சாலை

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் கனககிரிமலைக்குச் செல்லும் சாலையில் ரூ. 1.85 கோடி மதிப்பிலான புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் கனககிரிமலைக்குச் செல்லும் சாலையில் ரூ. 1.85 கோடி மதிப்பிலான புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. 
மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர், கனககிரிமலையில் உள்ள கனகாசலகுமரன் கோயிலுக்குச் செல்ல படிக்கட்டுகள் வழியாக ஒரு பாதையும், வாகனங்களில் செல்வோருக்கென ஒரு மண் பாதையும் உள்ளது. 
இந்த மண் பாதையில் மழைக் காலங்களில் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக இருப்பதால் பெரும்பாலான சமயங்களில் வாகனங்களில் செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி, ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.செல்வகுமார சின்னையன் ஆகியோரிடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று சுற்றுலாத் துறை சார்பில் ரூ. 1.70 கோடியும், மக்களவை உறுப்பினர் நிதி ரூ. 15 லட்சமும் ஒதுக்கப்பட்டு மொத்தம் ரூ. 1.85 கோடி செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான துவக்க விழா எழுமாத்தூர் மலையடிவாரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு, மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணி தலைமை வகித்து, சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தார். ஈரோடு மக்களவை உறுப்பினர் எஸ்.செல்வகுமாரசின்னையன், மொடக்குறிச்சி அதிமுக ஒன்றியச் செயலாளர் ஆர்.பி.கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், மொடக்குறிச்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் தமயந்தி சிவானந்தம், துணைத் தலைவர் கணபதி, கொடுமுடி ஒன்றியச் செயலாளர் கலைமணி, ஆவின் இயக்குநர் அசோக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments