FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெருந்துறையில் ரூ. 8.60 கோடி மதிப்பில் துணை மின் நிலையம் திறப்பு

பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் 3 ஏக்கர் பரப்பளவில் ரூ. 8.60 கோடி மதிப்பில், ஒருங்கிணைந்த

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் 3 ஏக்கர் பரப்பளவில் ரூ. 8.60 கோடி மதிப்பில், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள 33/11 கிலோ வாட்ஸ் துணை மின் நிலையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார். மின் வாரிய தலைமைப் பொறியாளர் சாந்தி வரவேற்றார். மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் இந்திராணி திட்ட விளக்கவுரையாற்றினார். சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், துணை மின் நிலையத்தைத் திறந்து வைத்தார். 
இத்துணை மின் நிலையத்தால், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், பெருந்துறை மருத்துவக் கல்லூரி, சிலேட்டர்புரம், மேக்கூர், கள்ளியம்புதூர் பகுதியைச் சேர்ந்த 50,000 பொதுமக்கம் பயனடைவார்கள். 
இதில், மின்வாரிய செயற்பொறியாளர் சின்னசாமி, உதவி செயற்பொறியாளர் முருகன், மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் எம்.ராஜேந்திரன், பெருந்துறை ஒன்றிய செயலாளர் விஜயன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments