வாகன விதிமீறல் குறித்து சோதனை
அந்தியூர் சுற்றுப்புறப் பகுதிகளில் மோட்டார் வாகன விதிமீறல் தொடர்பாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் திடீர் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
அந்தியூர் சுற்றுப்புறப் பகுதிகளில் மோட்டார் வாகன விதிமீறல் தொடர்பாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் திடீர் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
பவானி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மாலதி தலைமையில், அலுவலர்கள் அந்தியூர் சாலை, பர்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தனியார் பள்ளிக்குச் சொந்தமான வாகனங்கள் பராமரிப்பு, பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வது, சீருடை அணியாமல் சென்றது குறித்து 20 க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில், விதிகளைப் பின்பற்றாமல் சென்ற 6 தனியார் பள்ளி வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், முறையான ஆவணம் இல்லாமல் சென்ற சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. டிப்பர் லாரிகள் உள்ளிட்ட பிற வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.