FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஈரோடு ஷீரடி சாய்பாபா கோயில் குடமுழுக்கு விழா: யாகசாலை பூஜை தொடக்கம்

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் ஐயப்பன் கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள விஸ்வரூப ஷீரடி சாய்பாபா கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின.

Updated On : 29 ஜூன் 2018, 12:57 am IST
பகிர்:

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் ஐயப்பன் கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள விஸ்வரூப ஷீரடி சாய்பாபா கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள விஸ்வரூப ஷீரடி சாய்பாபா கோயிலின் உள்புறம், பஞ்சமுக விநாயகர், பாணலிங்கேஸ்வரர், ஸ்ரீதத்தாத்ரேயர் ஆகியோரின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. 
சுற்றுப் பிரகாரத்தில் பக்த ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையிலும்,  நுழைவாயிலில் பாவங்களை எரிக்கும் "துனி' சிலையும் அமைந்துள்ளன. இக்கோயில் குடமுழுக்கு விழா ஜூலை 1 ஆம் தேதி நடைபெறுகிறது. 
இந்நிலையில் விழாவுக்கான யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோம வழிபாட்டுடன் தொடங்கியது. 
தொடர்ந்து  நவக்கிரகஹோமம்,  மஹா பூர்ணாஹுதியும்,  மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம் ஆகிய பூஜைகள் நடைபெற்றன. 
இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதலும், தொடர்ந்து ஷீரடி சாய்பாபா உற்சவர் ஊர்வலம் ஈரோடு கருங்கல்பாளையம்,  கிருஷ்ணா திரையரங்கிலிருந்து தொடங்கி கோயிலை வந்தடைகிறது. நண்பகல் 12.15 மணிக்கு மேல் ஷீரடி சாய்பாயா பிரதம குருக்கள் மூலமாக விஸ்வரூப ஷீரடி சாய்பாபா திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. 
இதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு முதல் கால யாகபூஜைகளும், சனிக்கிழமை காலையில் இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெறுகின்றன.
இதையடுத்து ஜூலை 1 ஆம் தேதி காலை 5 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும்,  9 மணிக்கு ஷீரடி சாய்பாபா மற்றும் பரிவார தெய்வங்களின் விமானத்துக்கும் குடமுழுக்குசெய்யப்பட்டு மங்கள ஆரத்தியும் அன்னதானமும் நடைபெறுகின்றன. 
விழாவுக்கான ஏற்பாடுகளை,  கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் என்.சிவநேசன் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments