ரூ. 53.48 லட்சத்துக்கு எள் ஏலம்
பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் ஏல விற்பனை ரூ. 53.48 லட்சத்துக்கு நடைபெற்றது.
பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் ஏல விற்பனை ரூ. 53.48 லட்சத்துக்கு நடைபெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஏலத்தில் மொத்தம் 919 மூட்டைகள் எள், 686.67 குவிண்டால் விற்பனைக்கு வந்திருந்தது. இதில், வெள்ளை எள் கிலோ ரூ. 76.39 முதல் ரூ. 83.69 வரையிலும், கருப்பு எள் கிலோ ரூ. 72.89 முதல் ரூ. 84.99 வரையிலும், சிவப்பு எள் கிலோ ரூ. 70.11 முதல் ரூ. 72.69 வரையில் ஏலம் போனது. இங்கு மொத்த வர்த்தகம் ரூ. 53 லட்சத்து 48 ஆயிரத்து 161-க்கு நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.