FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லாரி ஓட்டுநர் அடித்துக் கொலை: மனைவியிடம் போலீஸார் விசாரணை

புன்செய் புளியம்பட்டி அருகே லாரி ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

புன்செய் புளியம்பட்டி அருகே லாரி ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 புன்செய் புளியம்பட்டி சுபிஷ்கா கார்டனைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (56), ஓட்டுநர். இவரது மனைவி புஷ்பா (46). இவர்களுக்கு நந்தகுமார் என்ற மகன் உள்ளார். நந்தகுமார் பெருமாநல்லூரில் மெக்கானிக்காக உள்ளார். 
ராஜேந்திரன், புஷ்பா இருவரும் 10 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். ராஜேந்திரன் அடிக்கடி மகன் நந்தகுமாரை பார்க்க வந்து செல்வாராம். இந்நிலையில், புஷ்பா வீட்டின் முன்பு ராஜேந்திரன் அடித்துக் கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த புன்செய் புளியம்பட்டி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி மனைவி புஷ்பாவிடம் விசாரித்து வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments