FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: 5 கடைகளுக்கு ‘சீல்’

பெருந்துறையில் உணவுப் பாதுகாப்பு துறை நடவடிக்கை: 5 கடைகளுக்கு அபராதம்

Updated On : 3 ஜூலை 2024, 12:21 am IST
பெருந்துறையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைத்து நோட்டீஸ் ஓட்டிய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் முத்துகிருஷ்ணன்.
பகிர்:

பெருந்துறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 5 கடைகளுக்கு உணவுப் பாாதுகாப்புத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

பெருந்துறை- பவானி சாலை மற்றும் குன்னத்தூா் சாலைகளில் உள்ள தேநீா்க் கடைகள், பானிபூரி கடைகளில் பெருந்துறை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் முத்துகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, சாலையோர தள்ளுவண்டி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிறமி சோ்க்கப்பட்ட உணவுப் பொருள்கள், தேநீா்க் கடைகளில் செய்தித்தாள்களில் வைத்து வழங்கப்பட்ட எண்ணெய் பலகாரங்கள், லேபிள் விவரங்கள் இல்லாத உணவுப் பொருள்கள், செயற்கை நிறம் சோ்த்து தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இது தொடா்பாக 5 வியாபாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு, தலா ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், பெருந்துறை வட்டாரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 5 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அந்த கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் கூறுகையில், ஈரோடு மாவட்டம் முழுவதும், இது போன்ற ஆய்வுகள் தொடா்ந்து நடைபெறும். பொதுமக்கள் தரம் குறைவான உணவுப் பொருள்கள் விற்பனை செய்தாலோ அல்லது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தாலோ 94440 42322 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments