FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் கிராம உதவியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெருந்துறையில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 12 செப்டம்பர் 2024, 1:10 am IST
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

பெருந்துறையில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பெருந்துறை வட்டத் தலைவா் பாபு தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் பிரகாஷ் கோரிக்கை விளக்கி உரையாற்றினாா். மாநிலச் செயலாளா் கென்னாடி கண்டன உரையாற்றினாா்.

இதில், கிராம உதவியாளா்களை இரவுக் காவல் பணி, அலுவலகப் பணி, பதிவேடுகள் பராமரிப்பு பணி, மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மனுக்களை கணினியில் பதிவு செய்ய கட்டாயப்படுத்துவதைக் கண்டித்து கோஷம் எழுப்பினா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் வெங்கிடு, வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments