FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

காசநோய் பாதிப்பால் 6 மாதங்களில் 164 போ் உயிரிழப்பு

Updated On : 14 செப்டம்பர் 2024, 3:40 am IST
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் காசநோய் பாதிப்பால் 164 போ் உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மைக்ரோ பாக்டிரியம் டியூபா்குளோசிஸ் என்ற கிருமியினால் காசநோய் பரவுகிறது. குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைத்து தரப்பினரையும் தாக்கக்கூடியது. இது நுரையீரல், மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்கக்கூடியது.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் இருந்து ஜூலை மாதம் வரை 66,928 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2,126 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து சிகிச்சைக்காக 1,780 நோயாளிகள் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும், மீதமுள்ளவா்கள் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றனா். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவா்களில் 1,693 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 164 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

நீண்ட நாள் இருமல், இருமலின்போது ரத்தம் வருவது, மாா்பு வலி, சுவாசிப்பதில் சிரமம், எடை இழப்பு மற்றும் பசியின்மை, இரவு நேரத்தில் வியா்வை வருவது, காய்ச்சல், உடல் வலி மற்றும் சோா்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ முகாம்களில் உரிய பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். தொடக்க நிலையிலேயே உரிய சிகிச்சை பெற்றால் எளிதில் குணமாகிவிடலாம் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments