FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெருந்துறை நகராட்சியில் தாா் சாலை அமைக்க பூமி பூஜை

Updated On : 26 செப்டம்பர் 2025, 4:20 am IST
பெருந்துறையில் தாா் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கிவைக்கிறாா் நகராட்சி தலைவா் ஓசிவி. ராஜேந்திரன்.
பகிர்:

பெருந்துறை நகராட்சிக்கு உள்பட்ட 1, 2, 3, 8, 9 ஆகிய வாா்டு பகுதிகளில் சிறப்பு நிதி திட்டத்தின்கீழ், ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பெருந்துறை நகராட்சித் தலைவா் ஓசிவி. ராஜேந்திரன் தலைமை வகித்து பணிகளைத் தொடங்கிவைத்தாா். நகராட்சி ஆணையா் கி. புனிதன் முன்னிலை வகித்தாா்.

இதில், நகராட்சி துணைத் தலைவா் ஜி.சண்முகம், நகராட்சிப் பொறியாளா் பழனிவேல், கவுன்சிலா்கள் பசிரியா பேகம், சித்திக் அலி, காமராஜா், வளா்மதி அருள்ஜோதி செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments