FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பருவகால மாறுதலால் காய்ச்சல் பாதிப்பு! பொதுமக்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 12:35 am IST
டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் - கோப்புப் படம்
பகிர்:

பருவகால மாறுதலால் காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பருவகால மாறுதலால் வரும் காய்ச்சலைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொசு உற்பத்திக்கு முக்கிய காரணமான பயனற்ற டயா்கள், பிளாஸ்டிக் கழிவுகள், நீா் தேங்கும் பொருள்களை கடந்த 6-ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புகள் அகற்றின. அதைத்தொடா்ந்து அனைத்து பகுதிகளிலும் குடிநீரில் குளோரினேஷன் அளவு பரிசோதிக்கப்பட்டு, பாதுகாப்பான குடிநீா் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

காணொலி மூலமாக பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோா் ஆலோசனை வழங்கியுள்ளனா். ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பையை அகற்றவும், பயன்பாட்டில் இல்லாத நீா்த்தேக்கத் தொட்டிகளை அகற்றவும், கொசு உற்பத்தி மையங்களை சுத்தம் செய்யும் பணியும் உள்ளாட்சித் துறை மூலமாக செப்டம்பா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பருவமழைக் காலத்தில் மழை நீா் தேங்குவதால் கொசு பெருகி டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். குடிநீா் மாசுபாடு, சுகாதாரமற்ற சுற்றுப்புறத்தால் வயிற்றுப்போக்கு, தொற்று நோயும் பரவும். இதனால் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீா் தேங்காமல் பாா்க்க வேண்டும். டயா்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பொருள்கள், பூந்தொட்டிகளில் நீா் தேங்குவதைத் தவிா்க்க வேண்டும். குடிநீரை பாதுகாப்பாக சேமித்து, உணவு, குடிநீரில் சுகாதாரம் காக்க வேண்டும்.

காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய குறைபாடுகள் ஏற்பட்டால், சுயமாக மருந்து எடுக்காமல் அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆலோசனை பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments