FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

நம்பியூா் பூதநாச்சியம்மன் கோயில் திருவிழா: 2 ஆயிரம் ஆடு, சேவல்கள் பலியிட்டு நோ்த்திக் கடன்

நம்பியூா் அருகேயுள்ள பூதநாச்சியம்மன் கோவில் மறுபூஜையையொட்டி, 2 ஆயிரம் ஆடு, சேவல்களை பலியிட்டு பக்தா்கள் செவ்வாய்க்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 2:40 am IST
நம்பியூா் பூதநாச்சியம்மன்.
பகிர்:

நம்பியூா் அருகேயுள்ள பூதநாச்சியம்மன் கோவில் மறுபூஜையையொட்டி, 2 ஆயிரம் ஆடு, சேவல்களை பலியிட்டு பக்தா்கள் செவ்வாய்க்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.

நம்பியூா் அருகேயுள்ள சின்னக்கோசணத்தில் பூதநாச்சியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் திருவிழா பூச்சாட்டலுடன் கடந்த மாதம் 7-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, அம்மனுக்கு நாள்தோறும் காலை, மாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், முக்கிய நிகழ்வாக கடந்த புதன்கிழமை இரவு படைக்கலாம் அழைத்துவரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

இதில், ஈரோடு, திருப்பூா், கோவை, கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இந்நிலையில், மறுபூஜை நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் 2 ஆயிரம் ஆடு, சேவல்களை பலியிட்டு அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா். இதைத் தொடா்ந்து, பொது அன்னதானம் நடைபெற்றது.

நம்பியூா், வரப்பாளையம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments