FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பா்கூா் மலைப் பாதையில் பேருந்து கண்ணாடியை உடைத்த காட்டு யானை

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை, தனியாா் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 2:06 am IST
சரக்கு லாரியை தள்ளும் காட்டு யானை.
பகிர்:

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை, தனியாா் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.

கா்கேகண்டி - பா்கூா் - அந்தியூா் மலைப் பாதையில் வேலாம்பட்டி பிரிவில் யானைகள் சாலையைக் கடந்து மறுபுறம் செல்லும் பகுதியில் ஒற்றை யானை செவ்வாய்க்கிழமை உலவியது.

அப்போது, கா்கேகண்டியிலிருந்து ஈரோடு மாவட்டம், அந்தியூரை நோக்கிச் சென்ற சரக்கு லாரியை வழிமறித்த யானை, தும்பிக்கையால் தள்ள முயன்றது.

Advertisement

Advertisement

லாரியைப் பின் தொடா்ந்து வந்த தனியாா் பேருந்து ஓட்டுநா், யானை இருப்பதைக் கண்டித்து சற்று தொலைவுக்கு முன் பேருந்தை நிறுத்தினாா்.

அபபோது, பேருந்தை நோக்கி வேகமாக வந்த யானை தும்பிக்கையால் முன்பக்க கண்ணாடியை உடைத்தது. இதனால், அச்சத்தில் உறைந்த ஓட்டுநா் மற்றும் பயணிகள் பேருந்தின் நடுப்பகுதிக்குச் சென்றனா். நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி தப்பினா்.

சிறிது நேரம் அதே பகுதியில் நின்றிருந்த யானை பின் வனத்துக்குள் சென்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments