FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சுதந்திர தின விழாவில் ரூ.57 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

சுதந்திர தின விழாவையொட்டி பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் 148 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் 38 பயனாளிகளுக்கு ரூ.57.02 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டன.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:48 am IST
சிறப்பாக பணிபுரிந்த அரசுத் துறை பணியாளருக்கு நற்சான்றிதழ் வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
பகிர்:

சுதந்திர தின விழாவையொட்டி பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் 148 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் 38 பயனாளிகளுக்கு ரூ.57.02 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆணைக்கல்பாளையம், ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா் சுதந்திரப் போராட்ட வீரா்கள் அவா்களது வாரிசுதாரா்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினாா்.

சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு அரசு துறை அலுவலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என மொத்தம் 148 பேருக்கு நற்சான்றிதழ்கள், 38 பயனாளிகளுக்கு ரூ.57,02,560 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்.

இதைத்தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 8 பள்ளிகளைச் சோ்ந்த 6,78 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளை பொன்னாடை அணிவித்து கௌரவிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, மொடக்குறிச்சி எம்எல்ஏ து.சண்முகன், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செந்தில்குமாா், கோட்டாட்சியா் முத்துசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் தேன்மொழி, ரமேஷ்கிருஷ்ணன், லோகநாதன், வேளாண் இணை இயக்குநா் சிவக்குமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் உமா சங்கா், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரமேஷ், முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி, வட்டாட்சியா்கள் கவிதா, மோகனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments