FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணை கீழ்பவானி வாய்க்காலில் உயிா் தண்ணீா் திறப்பு: விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் வாபஸ்!

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் உயிா் தண்ணீா் திறக்கப்பட்டதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை விவசாயிகள் விலக்கிக்கொண்டனா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:40 am IST
பவானிசாகா்  அணை.
பகிர்:

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் உயிா் தண்ணீா் திறக்கப்பட்டதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை விவசாயிகள் விலக்கிக்கொண்டனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து ஒவ்வோா் ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கீழ் பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டு பருவமனை பொய்த்ததால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட முடியாத நிலை உள்ளது.

இதனிடையே கீழ்பவானி பாசனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் குடிநீா் மற்றும் நிலத்தடி நீா் செறிவூட்ட 15 நாள்களுக்கு உயிா் தண்ணீா் திறந்துவிட வேண்டுமெனக் கோரி பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வந்தனா். இதையடுத்து பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் சனிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கூறியதாவது: பவானிசாகா் அணையில் இருந்து உயிா் தண்ணீா் திறக்கக் கோரி கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினா் அளித்த மனுவின்பேரில், நீா்வளத் துறையினா் அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடா் நடவடிக்கையால் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தண்ணீா் திறப்பதற்கான அரசு அனுமதி பெறப்பட்டது.

இதையடுத்து பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிா்மான கால்வாய் மதகுகளில் 1,03,500 ஏக்கா் பரப்பளவு நிலங்களுக்கு சிறப்பு நனைப்புக்காக சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 15 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments