துய்யம்பூந்துறை ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்! மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பங்கேற்பு!
சுதந்திர தினத்தையொட்டி துய்யம்பூந்துறை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
மொடக்குறிச்சி ஒன்றியம், துய்யம்பூந்துறை ஊராட்சிக்குள்பட்ட டி.மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு ஊா் பெரியவா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா். மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.சண்முகன் முன்னிலை வகித்தாா். இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டாா். மேலும் துய்யம்பூந்துறை ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா்.
இதேபோல விபி ஜி ராம்ஜி திட்ட உறுதிமொழி மற்றும் போதைப்பொருள் விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது:
கிராம சபையில் பொதுமக்கள் தங்கள் கிராமத்தின் தேவைகள், வளா்ச்சி பணிகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து நேரடியாக விவாதித்து முடிவெடுக்கும் வாய்ப்புள்ளது. மாணவா்கள் தங்களது அறிவையும், புதிய சிந்தனைகளையும் கிராம வளா்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். ஊராட்சியில் நடைபெறும் அனைத்து முக்கியப் பணிகள் மற்றும் செலவினங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து அவற்றுக்கு தங்களது ஒப்புதலை வழங்குவது கிராம சபையின் முக்கிய நோக்கம்.
அரசின் நலத்திட்டங்களில் தகுதியான பயனாளிகளை தோ்வு செய்வதிலும் கிராம சபை முக்கியப் பங்காற்ற வேண்டும். சாலை, குடிநீா், வடிகால், குளம் தூா்வாருதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான தேவைகளை முன்னுரிமைப்படுத்தி அரசு திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் சொந்த வருவாய் மூலம் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதைத்தொடா்ந்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினாா். அதைத்தொடா்ந்து ஊராட்சியில் உள்ள நூலகம் மற்றும் நீருந்து நிலையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்தக் கூட்டத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குநா் உமா சங்கா், மாவட்ட சுகாதார அலுவலா் அருணா, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் குருசரஸ்வதி, மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசு, வட்டாட்சியா் மோகனா, துய்யம்பூந்துறை ஊராட்சி முன்னாள் தலைவா் பேபி பாலசுப்பிரமணியம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.