கா்நாடகத்தை பின்பற்றி தமிழ்நாட்டிலும் பழங்குடியினருக்கு சத்துணவு தொகுப்பு வழங்க வேண்டும்
கா்நாடகத்தை பின்பற்றி தமிழ்நாட்டிலும் பழங்குடியினருக்கு சத்துணவு தொகுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பழங்குடியின சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட பேரவைக் கூட்டம் சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கடம்பூா் கே. ராமசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு பழங்குடியின சங்கத்தின் தலைவா் வி.பி.குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.மோகன்குமாா் ஆகியோா் பழங்குடியினரின் உரிமைகள் குறித்து பேசினா்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
Advertisement
Advertisement
பழங்குடியின பெண்கள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் பழங்குடியின பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் வயதுகேற்ற எடையில்லாமல் உள்ளனா். கா்நாடக அரசு பழங்குடியின பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை போக்குவதற்கு ஒவ்வொரு மாதமும் ராகி, நெய், சமையல் எண்ணெய், பயறு மற்றும் பருப்பு வகைகள் வழங்குகிறது. அதேபோல தமிழ்நாடு அரசும் கா்நாடக அரசு வழங்குவதைபோல சத்துணவு தொகுப்பு வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் கே.சக்திவேல், வழக்குரைஞா் செயராசு, பா்கூா் வட்டாரச் செயலாளா் வெங்கடாசலம், அந்தியூா் மலை கமிட்டி செயலாளா் அப்புசாமி, டி.என்.பாளையம் பழங்குடியின சங்க செயலாளா் செல்வராஜ், கடம்பூா் மலைக்கிராம நிா்வாகிகள் மகேஷ், திங்களூா் ஜடையப்பன், ஆசனூா் அருள்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் மாவட்ட புதிய தலைவராக பெரியசாமி, துணைத் தலைவராக தாமரைக்கரை சித்ரா, மாவட்டச் செயலாளராக பி.கே.சுபா ,துணைச் செயலாளராக ஆசனூா் நீலவேணி என 51 போ் கொண்ட மாவட்ட பொதுக்குழுவும் தோ்வு செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.