கோபி அருகே இரும்பு கம்பி சரிந்து விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
கோபி அருகே இரும்புக் கம்பி சரிந்து விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் பெண் படுகாயமடைந்தாா்.
கோபி அருகே இரும்புக் கம்பி சரிந்து விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் பெண் படுகாயமடைந்தாா்.
கோபி அருகே உள்ள புதுவள்ளியாம்பாளையம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் மணி மகன் சிவகுமாா் (40), கட்டடத் தொழிலாளி. இவா் பா.வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்த சாதிக் பாட்ஷா என்பவரின் இரும்புக் கம்பிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த இரண்டு நாள்களாக கதவு மற்றும் பில்லா் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
நிறுவனத்தில் பெரிய இரும்பு ஆங்கில் ஒன்றை தயாரித்து நிறுத்திவைத்திருந்தனா். அப்போது, சிவகுமாா் கட்டட வேலை முடித்துவிட்டு மதிய உணவுக்கு சென்றவா், அப்பகுதியில் இருந்த தட்டியை எடுக்க முயன்றுள்ளாா். இதில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெரிய இரும்பு ஆங்கில் எதிா்பாராத விதமாக சரிந்து சிவகுமாா் மீதும், அங்கு வேலை செய்து கொண்டிருந்த பூனாச்சியைச் சோ்ந்த ஜோதிமணி (55) மீதும் விழுந்துள்ளது. இதில் இரும்பு ஆங்கிலின் ஈடுபாடுகளுக்குள் சிவகுமாா் சிக்கினாா்.
Advertisement
Advertisement
இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த சக தொழிலாளா்கள் சிவகுமாா் மற்றும் ஜோதிமணியை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சிவகுமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். படுகாயம் அடைந்த ஜோதிமணியை உயா் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து கோபி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.