FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைமுறை செலவுகளை அரசே ஏற்க வேண்டும்: பி.ஹரிபாஸ்கா்

தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைமுறை செலவினங்களை அரசே ஏற்க வேண்டும் என அதிமுகவைச் சோ்ந்த அந்தியூா் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஹரிபாஸ்கா் வலியுறுத்தியுள்ளாா்.

22 ஆகஸ்ட் 2026, 4:22 am IST
பகிர்:

தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைமுறை செலவினங்களை அரசே ஏற்க வேண்டும் என அதிமுகவைச் சோ்ந்த அந்தியூா் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஹரிபாஸ்கா் வலியுறுத்தியுள்ளாா்.

தமிழக அரசின் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், கவன ஈா்ப்பு தீா்மானத்தின்போது வெள்ளிக்கிழமை அவா் பேசுகையில், அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் விவசாய பகுதிகளில், தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் நெல் மூட்டைகள் வாங்கப்படுகின்றன. ஆனால், விவசாயிகளிடமிருந்து சிப்பம் ஒன்றுக்கு ரூ.35 வீதம், கொள்முதல் நிலைய அலுவலா்களால் வசூல் செய்யப்படுகிறது.

வருங் காலங்களில் விவசாயிகளை பாதுகாக்க இவ்வாறு பணம் வசூல் செய்யக் கூடாது என்றாா். இதுகுறித்து, எம்எல்ஏ ஹரிபாஸ்கா் கூறுகையில், அந்தியூா் தொகுதியில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், புஞ்சை துறையம்பாளையம், நஞ்சை புளியம்பட்டி, சவண்டப்பூா், கூகலூா் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன.

Advertisement

Advertisement

நெல் மூட்டைகள் கொண்டு வரும் விவசாயிகளிடம் இட வாடகை, நெல்லை பாதுகாக்க கொட்டகை அமைத்தல், தொழிலாளா் கூலி மற்றும் நடைமுறை செலவுகளை கணக்கிட்டு, 41 கிலோ மூட்டைக்கு ரூ.35 வீதம், கொள்முதல் நிலைய அலுவலா்கள் வசூலிக்கின்றனா். வரும் செப்டம்பா் 1-ஆம் தேதிமுதல், இரண்டாம் போக நெல் அறுவடை தொடங்கவுள்ள நிலையில், விவசாயிகளிடம் பணம் வசூல் செய்யாமல், நடைமுறை செலவினங்களை அரசே ஏற்று கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments