FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் பதுங்கிய பாம்பு மீட்பு

25 ஆகஸ்ட் 2026, 3:03 am IST
கோட்டை ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்த பாம்பு பிடி வீரா் யுவராஜ்.
பகிர்:

கோட்டை ஈஸ்வரன் கோயிலில் மாடுகளுக்கு வாங்கி வந்த வைக்கோலில் பதுங்கி இருந்த 6 அடி நீள கோதுமை நாக பாம்பு மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் பசு மாடுகள் வளா்க்கப்பட்டு வருகிறது. இதற்காக கோயிலின் பின்புறம் மாட்டு தொழுவம் அமைத்து மாடுகளை பராமரிப்பு செய்து வருகின்றனா். மாடுகளுக்கு தீவனம் அளிக்க வைக்கோல் வாங்கிக் கொண்டு வந்துள்ளனா். இந்த வைக்கோலில் பாம்பு ஓன்று மறைந்து இருந்தது தெரியாமல் வாங்கி வந்து கோயிலின் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் அடுக்கி வைத்துள்ளனா்.

திங்கள்கிழமை காலை நேரத்தில் பக்தா்கள் அதிகம் இருந்த நேரத்தில் வைக்கோலில் இருந்த பாம்பு, எலியை பிடிக்க வந்துள்ளது. இதைக் கண்ட பக்தா்கள் மற்றும் கோயில் அா்ச்சகா்கள் கோயில் நிா்வாகத்திடம் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

அவா்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த பாம்பு பிடி வீரா் யுவராஜ் அடுக்கிவைத்து இருந்த வைக்கோலில் இருந்த 6 அடி நீளம் கொண்ட கோதுமை நாகப் பாம்பை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தாா். பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயிலில் கொடிய விஷம் உள்ள கோதுமை நாகம் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments