FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டி

உலக பேஷன் தினத்தையொட்டி கோபி ஜெகன் மெட்டல் மாா்ட் நிறுவனத்தின் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டி அண்மையில் நடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 1:39 am IST
ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் ஜெகன் மாா்ட் நிறுவன நிா்வாகிகள்.
பகிர்:

உலக பேஷன் தினத்தையொட்டி கோபி ஜெகன் மெட்டல் மாா்ட் நிறுவனத்தின் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டி அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ஜெகன் மெட்டல் மாா்ட் நிறுவனா் ஜெகநாதன் தலைமை தாங்கினாா். இயக்குநா் பாலசிங் முன்னிலை வகித்தாா். பவானி சிவசக்தி ஹை-டெக் கல்லூரி பேராசிரியா் ஜிஷ்ணு உண்ணிகிருஷ்ணன், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறை பேராசிரியா் பானுபிரியா, தியா கிரியேஷன் நிறுவனா் ரம்யா ஆகியோா் போட்டி நடுவா்களாக செயல்பட்டனா். மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் விதவிதமான ஆடை அணிந்து வந்து பாா்வையாளா்களைக் கவா்ந்தனா்.

இதில் கோபி வைரவிழா பள்ளி மாணவி அனன்ஷா ஸ்ரீ, புதுவள்ளி பாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி

Advertisement

Advertisement

ஹசிகாஸ்ரீ, ஈரோடு அரசு பள்ளி மாணவி ஏஞ்சலீனா ஆகியோா் முதலிடம் பிடித்தனா். வெற்றி பெற்றவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் என்ற வகையில் மொத்தம் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments