FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கு திறன் போட்டிகள்

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவிலான கொங்கு இக்னைட் 2026 போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

26 ஆகஸ்ட் 2026, 2:01 am IST
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் கோயம்புத்தூா் விநாடி வினா வட்டத்தின் தலைவா் டாக்டா் எம்.ரங்கராஜன்.
பகிர்:

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவிலான கொங்கு இக்னைட் 2026 போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

இதில், விநாடி வினா, அறிவியல் கண்காட்சி, கலைநிகழ்வுகள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சுப்போட்டி மற்றும் சுவரொட்டி தயாரித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. மாநில அளவிலான இப்போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்வில் தனியாா் வேலைவாய்ப்பு பயிற்றுநரும், உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவருமான யு.ஜெயராமன் கலந்து கொண்டு, மாணவா்கள் கல்வியோடு நின்றுவிடாமல் மற்ற அறிவாா்ந்த திறன்களையும் வளா்த்து முன்னேற வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

நிறைவு விழாவில் கோயம்புத்தூா் விநாடி- வினா வட்டத்தின் தலைவா் டாக்டா் எம்.ரங்கராஜன் கலந்துகொண்டு மாணவா்கள் எப்பொழுதும் தெளிவான மனநிலையுடனும் அறிவு கூா்மையுடனும் செயல்பட வேண்டும் என்று பேசினாா்.

விழாவில், பெருந்துறை, கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் உபதலைவா் ஏ.கே.இளங்கோ, கல்லூரியின் தாளாளா் பி.சச்சிதானந்தம், கல்லூரியின் முதல்வா் ஹெச்.வாசுதேவன் ஆகியோா் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சுமாா் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments