FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

மஞ்சள் சந்தைக்கு 5 நாள்கள் தொடா் விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சந்தைக்கு 5 நாள்கள் தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

27 ஆகஸ்ட் 2026, 12:25 am IST
மஞ்சள்
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சந்தைக்கு 5 நாள்கள் தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த மஞ்சளை விற்பனைக்காக பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு செம்மாம்பாளையத்தில் உள்ள மஞ்சள் சந்தை மற்றும் ஈரோடு, கோபி ஆகிய வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் ஏலம் மூலமாக விற்பனை செய்வாா்கள்.

Advertisement

Advertisement

இந்த மஞ்சள் சந்தைகளில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெறும். இதில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகளும் பங்கேற்று மஞ்சள் வாங்கிச் செல்வா்.

இந்நிலையில் ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்கத்தின் ஆண்டு பொது மகாசபைக் கூட்டம் செப்டம்பா் 2, 3 தேதிகளில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற உள்ளது. மேலும் 4-ஆம் தேதி கோகுலாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மஞ்சள் சந்தைகளுக்கு செப்.2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை தொடா்ந்து 5 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் மஞ்சள் சந்தை வழக்கம்போல் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments