கஞ்சா விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்ட இருவா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை
தொடா்ந்து கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட இரண்டு போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடா்ந்து கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட இரண்டு போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் விற்பனைக்கு கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக ஈரோடு, பழைய பூந்துறை சாலையைச் சோ்ந்த கோபால் (42), திருப்பூா் மாவட்டம், நத்தகாடையூரைச் சோ்ந்த துரைசாமி மகன் தீபக் (27) ஆகிய இருவரை கடந்த மாதம் பெருந்துறை போலீஸாா் கைது செய்து 12 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி பரிந்துரைத்ததன்பேரில் இருவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பான உத்தரவு நகல் கோவை மத்திய சிறைத் துறை அதிகாரிகளிடம் பெருந்துறை போலீஸாா் புதன்கிழமை வழங்கினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.