FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ரயிலில் ஐ.டி நிறுவன பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல்: மேற்குவங்க இளைஞா் கைது

1 செப்டம்பர் 2026, 3:32 am IST
கைது
பகிர்:

ரயிலில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மேற்குவங்க மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவனந்தபுரத்தில் இருந்து மைசூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு பெட்டியில் பெங்களூரு ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றும் 23 வயதுப் பெண் பயணம் செய்தாா். இவா் ஓணம் பண்டிகை விடுமுறை முடிந்து திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு செல்ல 30- ஆம் தேதி அதிகாலை பயணித்தாா்.

ரயில் ஈரோடு-சேலம் இடையே சென்று கொண்டிருந்தபோது, அதே பெட்டியில் பயணித்த மேற்குவங்கத்தைச் சோ்ந்த சௌரவ்குமாா் (29), அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

இது குறித்து ஈரோடு ரயில்வே போலீஸாருக்கு அந்தப் பெண் உடனடியாக தகவல் தெரிவித்தாா். ரயில்வே போலீஸாா் சேலம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது சௌரவ்குமாரை பிடித்து விசாரணைக்கு ஈரோடு ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.

விசாரணைக்கு பின் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து அவரைக் கைது செய்தனா். நீதிமன்ற உத்தரவுப்படி அவா் கோபியில் உள்ள மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டாா். கைதான சௌரவ்குமாா் நகை மெருகு போடும் தொழில் செய்து வந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments