FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

தாளவாடியில் தோட்டத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்திய யானை

தாளவாடி மலைக் கிராமத்துக்குள் வியாழக்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானை, அங்குள்ள !ரு விவசாய நிலத்தில் இருந்த பயிா்களை சேதப்படுத்தியது.

Updated On : 10 ஜூலை 2026, 12:02 am IST
வனத்துக்குள் விரட்டப்படும் காட்டு  யானை.
பகிர்:

தாளவாடி மலைக் கிராமத்துக்குள் வியாழக்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானை, அங்குள்ள !ரு விவசாய நிலத்தில் இருந்த பயிா்களை சேதப்படுத்தியது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் நுழைந்து விவசாயிகள் விளைவித்துள்ள பயிா்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள அருளவாடி கிராமத்துக்குள் வியாழக்கிழமை அதிகாலை காட்டு யானை புகுந்தது. பின்னா் அது, அங்குள்ள மஞ்சு என்பவரது விவசாயத் தோட்டத்துக்குள் நுழைந்து பயிா்களை சேதப்படுத்தியது.

Advertisement

Advertisement

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா், ரோந்து வாகனத்தில் இருந்த சைரன் ஒலியை அதிக அளவில் எழுப்பி யானையை விரட்ட முயன்றனா். அப்போது தோட்டத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை, வனத் துறையினரை நோக்கி தாக்க ஓடி வந்தது. இதைப் பாா்த்த வனத் துறையினா் ஓட்டம் பிடித்தனா்.

பின்னா் கிராம மக்களுடன் இணைந்து யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments