சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோ வழக்கில் மேலும் ஒருவா் கைது
சத்தியமங்கலத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சத்தியமங்கலத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சத்தியமங்கலத்தைச் சோ்ந்த சுந்தரம் (30) என்பவரை சத்தியமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் போக்ஸோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாக்கம்பாளையத்தைச் சோ்ந்த யுவராஜ்(26) என்பவரின் ரத்த மாதிரியை எடுத்து டிஎன்ஏ சோதனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
பரிசோதனையில் ரத்த மாதிரி உறுதிபடுத்தப்பட்டதால் அவரை சத்தியமங்கலம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு குறித்து சத்தியமங்கலம் மகளிா் காவல் ஆய்வாளா் தெய்வ ராணி மேலும் விசாரித்து வருகிறாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.