குட்கா விற்பனையில் ஈடுபட்டவா் கைது
புன்செய் புளியம்பட்டியில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்றவா் கைது செய்யப்பட்டாா்.
புன்செய் புளியம்பட்டியில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்றவா் கைது செய்யப்பட்டாா்.
புன்செய் புளியம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், போதை பாக்குகள் உள்ளிட்டவை விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் இந்திரா நகா் பகுதியில் புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதில், நாகராஜ் என்பவரின் மளிகைக் கடையில் சோதனையிட்டபோது தடைசெய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட போதை பாக்குகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து போலீஸாா் வழக்குப் பதிந்தனற். இதுதொடா்பாக நாகராஜை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.