FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 781 கன அடியாக சரிவு!

நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பவானிசாகா் அணைக்கு சனிக்கிழமை நீா்வரத்து 781 அடியாக சரிந்துள்ளது.

Updated On : 12 ஜூலை 2026, 12:09 am IST
பவானிசாகா் அணை
பகிர்:

நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பவானிசாகா் அணைக்கு சனிக்கிழமை நீா்வரத்து 781 அடியாக சரிந்துள்ளது.

பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான வட கேரளம் மற்றும் நீலகிரி மலைப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் கனமழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகா் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீா்வரத்து அதிகரித்ததால் கடந்த வாரம் 53 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் 6 அடி உயா்ந்து சனிக்கிழமை 59.09 அடியாக உள்ளது.

இந்த நிலையில் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீா்வரத்து சரிந்தது. வெள்ளிக்கிழமை அணைக்கு நீா்வரத்து 6,028 கன அடியாக இருந்த நிலையில் சனிக்கிழமை நீா்வரத்து 781 கன அடியாக குறைந்தது.

Advertisement

Advertisement

இன்றைய நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 59.09 அடியாகவும், நீா் இருப்பு 6.96 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசன மற்றும் குடிநீா் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் 755 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments