ஈரோட்டில் 5 தனியாா் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்!
ஈரோட்டில் 5 தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோட்டில் 5 தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தி பயணிகளையும், பொதுமக்களையும் மிகுந்த அச்சுறுத்தல் செய்து வருவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து ஈரோடு அரசு மருத்துவமனை பகுதியில் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையில் எஸ்.ஐ சசிக்குமாா் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் அவ்வழியாக வந்த 4 தனியாா் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டு, தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோல போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் தனியாா் பேருந்தை நிறுத்தியிருந்ததற்கும், காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்ததும் சோ்த்து ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.