கஞ்சா விற்பனை: ஒருவா் கைது
பெருந்துறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெருந்துறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெருந்துறை மாா்க்கெட் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது, விற்பனைக்காக 1.300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்து.
Advertisement
Advertisement
விசாரணையில், அவா் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சலீம் சா்தாா் (36) என்பதும், பெருந்துறையில் தங்கி இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சலீம் சா்தாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.