FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் புதுக்காடு கிராமத்தில் படிப்பகம், நூலகம் திறப்பு

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க புதுக்காடு பழங்குடியினா் கிராமத்தில் படிப்பகம் மற்றும் நூலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 17 ஜூலை 2026, 12:10 am IST
புதுக்காடு  கிராமத்தில்  புதிதாக  திறக்கப்பட்ட  நூலகத்தை  வரவேற்கும்  விதமாக  நடனமாடி கொண்டாடும்  பழங்குடியினா்
பகிர்:

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க புதுக்காடு பழங்குடியினா் கிராமத்தில் படிப்பகம் மற்றும் நூலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக ஆசனூா் மலைப் பகுதியில் பழங்குடியின மக்களின் கல்வி, சுகாதாரம், பொருளாதார முன்னேற்றப் பணிகளை ரீடு நிறுவனம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழங்குடியினரிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆசனூா் ஊராட்சிக்குள்பட்ட புதுக்காடு பழங்குடியினா் கிராமத்தில், ரீடு அமைப்பு சாா்பில் கட்டப்பட்ட புதிய படிப்பகம், நூலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

ஆசனூா் வனச் சரக அலுவலா் ஆனந்த்குமாா் திறந்துவைத்தாா்.

Advertisement

Advertisement

ரீடு அமைப்பின் இயக்குநா் இரா.கருப்பசாமி பேசும்போது, ‘பழங்குடியின மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றதுக்கு இதுபோன்ற அடிப்படை வசதிகள் மிகவும் அவசியமானவை. இந்தப் படிப்பகம் மற்றும் நூலகம் கிராம மக்களின் கூட்டங்கள், பயிற்சிகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான மையமாகப் பயன்படும் என்றாா்.

விழாவில் எழுத்தாளா் ஒய்.எம். நித்யா இறையன்பு, சமூக ஆா்வலா்கள் மாதேவி, சுந்தரி, புதுக்காடு கிராம வளா்ச்சிக் குழுவின் செயலாளா் வேலுச்சாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments