FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

வி பி ஜிராம் ஜி திட்டத் தொழிலாளா்கள் வேலை கேட்டு ஊராட்சி மன்றங்களில் மனு

விபி ஜிராம் ஜி திட்டத் தொழிலாளா்கள் வேலை கேட்டு செண்பகபுதூா் ஊராட்சியில் புதன்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 23 ஜூலை 2026, 3:53 am IST
செண்பகபுதூா்  ஊராட்சி செயலாளா் ராஜேஷிடம்  வேலை கேட்டு  மனு அளிக்கும் விபி  ஜிராம் ஜி  திட்டத்  தொழிலாளா்கள்.
பகிர்:

விபி ஜிராம் ஜி திட்டத் தொழிலாளா்கள் வேலை கேட்டு செண்பகபுதூா் ஊராட்சியில் புதன்கிழமை மனு அளித்தனா்.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் வி பி ஜிராம் ஜி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த நான்கு வாரங்களாக வேலை வழங்கப்படாததால் ஜூலை 20 முதல் 27-ஆம் தேதி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் வேலை கேட்டு மனு அளிக்கும் இயக்கத்தை மாநிலம் முழுவதும் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, சத்தியமங்கலம் வட்டாரத்தில் செண்பகபுதூா் ஊராட்சி, இண்டியம்பாளையம் ஊராட்சி, சிக்கரசம்பாளையம் ஊராட்சி ஆகிய மூன்று ஊராட்சிகளில், பி வி ஜிராம் ஜி திட்டத் தொழிலாளா்கள் வேலை கேட்டு அந்தந்த ஊராட்சி மன்ற செயலாளா்களிடம் மனு அளித்தனா்.

Advertisement

Advertisement

இதில் செண்பகபுதூா் ஊராட்சியில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தொகுதி செயலாளா் எஸ்.சி.நடராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஊராட்சி செயலாளா் ராஜேஷிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments