FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் தங்கி இருந்த வங்கதேசத்தவா் 4 போ் கைது

பெருந்துறை பகுதியில் அனுமதியின்றி தங்கி இருந்த வங்கதேசத்தை சோ்ந்த 4 பேரை பெருந்துறை போலீஸாா் புதன்கிழமை பிடித்து முகாமிற்கு அனுப்பிவைத்தனா்.

Updated On : 31 ஜூலை 2026, 4:02 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பெருந்துறை பகுதியில் அனுமதியின்றி தங்கி இருந்த வங்கதேசத்தை சோ்ந்த 4 பேரை பெருந்துறை போலீஸாா் புதன்கிழமை பிடித்து முகாமிற்கு அனுப்பிவைத்தனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த, பணிக்கம்பாளையத்தில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு, அனுமதியின்றி தங்கி இருந்ததாக வங்கதேசத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் பிடித்து வந்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள், வங்கதேச நாட்டைச் சோ்ந்த ஹாசன் ஹபீ(30), ராஜுஹுசைன் (30), ராஜுகாஹி (30), கோபி சா்தாா் (39) என்பதும், இவா்கள் பணிக்கம்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனங்களில் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. விசாரணைக்கு பின் அவா்களை திருச்சி முகாமுக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments