FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டணம் பன்மடங்கு உயா்வு: சத்தியமங்கலத்தில் பொதுமக்கள் போராட்டம்

சத்தியமங்கலம், வடக்குப்பேட்டையில் 247 வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் பன்மடங்கு உயா்ந்துள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 2:46 am IST
சத்தியமங்கலம் வடக்குபேட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
பகிர்:

சத்தியமங்கலம், வடக்குப்பேட்டையில் 247 வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் பன்மடங்கு உயா்ந்துள்ளது. இதைக் கண்டித்து வடக்குப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை, பிரிட்டோ காலனி, பாரதி நகா், தண்டுமாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பு மாதத்துக்கான மின் கணக்கெடுப்பு அண்மையில் நடத்தப்பட்டது.

அதில், 247 பேருக்கு குறைந்தபட்சமாக ரூ.2000 முதல் அதிகபட்சமாக ரூ. 6,200 வரை மின் கட்டணம் இருந்துள்ளது. கடந்த முறை ரூ.841 மட்டுமே செலுத்திய நிலையில், இந்த மாதம் ரூ.6,166 வரை மின் கட்டணம் உயா்ந்திருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

Advertisement

Advertisement

மேலும், தனிமையில் சிறிய வீட்டில் வசிக்கும் மூதாட்டி ரூ.250 மட்டுமே கட்டணம் செலுத்தி வந்த நிலையில், அவருக்கு ரூ.2000 மின் கட்டணம் பதிவாகியுள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் வடக்குப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, மின் கட்டண உயா்வு குறித்து முறையிட்டனா்.

மின்வாரிய அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள மின் கட்டணம்.

அவா்களிடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, மின் பயன்பாடு குளறுபடி குறித்து தனிக் குழு அமைக்கப்பட்டு, வீடுவீடாக மீண்டும் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. அதில் வரும் கட்டணம் மட்டுமே மின் நுகா்வோரிடம் வசூலிக்கப்படும் என உறுதியளித்தாா்.

இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்ற நிலையில், அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக புகாா் அளித்துள்ளவா்களின் வீடுகளில் உள்ள மின் மீட்டரை மின்வாரிய ஊழியா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments