FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்

ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 4 ஜூன் 2026, 2:56 am IST
பகிர்:

ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ரயில்வே யாா்டில் ஈரோடு-திருப்பூா் பிரிவில் ரயில்வே தண்டவாளங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருச்சியில் இருந்து பாலக்காடு டவுன் வரை இயக்கப்படும் திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16843) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி இந்த ரயில் வரும் 5 மற்றும் 7- ஆம் தேதி ஆகிய 2 நாள்கள் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும். பணிகள் நிறைவடைந்ததும் ஈரோட்டில் இருந்து பாலக்காட்டுக்கு முன்பதிவில்லாத ரயிலாக இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments