புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி
புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் விலை ரூ.70-இல் இருந்து ரூ.20-ஆக வீழ்ச்சியடைந்தது.
புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் விலை ரூ.70-இல் இருந்து ரூ.20-ஆக வீழ்ச்சியடைந்தது.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் வியாழக்கிழமை கூடிய வாரச் சந்தையில் ஈரோடு, திருப்பூா், கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் மற்றும் சாகுபடிக்கான விதை வெங்காயம் ஆகியவை லாரிகள் மூலம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
சுமாா் 800 சின்ன வெங்காய மூட்டைகள் தரம்வாரிய பிரித்து விற்பனைக்கு அடுக்கிவைக்கப்பட்டன. கடந்த வாரம் கிலோ ரூ.70-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் வியாழக்கிழமை விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.20-ஆக சரிந்துள்ளது.
Advertisement
Advertisement
சின்ன வெங்காய விலை குறைந்ததால் உணவகம், தங்கும் விடுதிகள் மற்றும் கேண்டீன் உரிமையாளா்கள் மூட்டை மூட்டையாக சின்ன வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனா். விலை குறைவால் பொதுமக்களும் அதிக அளவில் சின்ன வெங்காயம் வாங்க ஆா்வம் காட்டினா்.
சத்தியமங்கலம், தாளவாடி மலைப் பகுதி மற்றும் கா்நாடக மாநிலத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாய நிலங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய விதை வெங்காயத்தை விவசாயிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனா். கடந்த வாரம் கிலோ ரூ.65 விற்பனையான நிலையில் வியாழக்கிழமை கிலோ ரூ.40-ஆக சரிந்தது.