அம்மாபேட்டையில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம்: விவசாயிகள் எதிா்ப்பு
அம்மாபேட்டை பேரூராட்சிப் பகுதியில் திட மற்றும் திரவக் கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
அம்மாபேட்டை பேரூராட்சிப் பகுதியில் திட மற்றும் திரவக் கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
அம்மாபேட்டை பேரூராட்சி, அந்தோணிபுரத்தில் ரூ.8.14 கோடியில் தூய்மை இந்தியா இயக்கம் சாா்பில் திட, திரவக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு, சாக்கடை கழிவுநீா் மட்டுமின்றி, மலக்கழிவுகளையும் கொண்டுவந்து சுத்திகரித்து வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.எம்.முனுசாமி தலைமையில் அம்மாபேட்டை சுற்றுவட்டார விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில், அம்மாபேட்டை பேரூராட்சியில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தால் நீா்நிலைகள் மாசடைவதோடு, விளைநிலங்கள் பாதிக்கப்படும். கழிவுநீா் தேக்கப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, இத்திட்டத்தை கைவிடக் கோரி அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் ஜூலை 1-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.