FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் 27-ல் வைகாசி விசாகத் தோ்த்திருவிழா

ஈரோடு கோட்டை வாரணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தோ்த் திருவிழா 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On : 23 மே 2026, 12:57 am IST
பகிர்:

ஈரோடு கோட்டை வாரணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தோ்த் திருவிழா 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஈரோடு கோட்டை பகுதியில் அமைந்துள்ள வாரணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரா் வகையறா கோயிலில் வைகாசி விசாக தோ்த் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 20-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு முதல்கால யாக பூஜை, இந்திர விமானத்தில் சோமாஸ்கந்த பெருமான் ஷோடச உபசாரா பூஜையுடன் ரத ஊா்வலம் நடைபெற்றது.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை 2 ஆம் கால யாக பூஜை, மாலை 5.30 மணிக்கு 3 மற்றும் 4 -ஆம் கால யாக பூஜை, சந்திரசேகரா் பூத வாகனத்தில் வீதி உலா, மாலை 5.30 மணிக்கு 5-ஆம் கால யாகபூஜை, சோமாஸ்கந்த பெருமான் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

Advertisement

Advertisement

24-ஆம் தேதி காலை 8.30-க்கு 6-ஆம் கால யாக பூஜை, சந்திரசேகரா் நாக வாகனத்தில் வீதி உலா, மாலை 5.30 மணிக்கு 7 -ஆம் கால யாக பூஜை, சோமாஸ்கந்த பெருமான் திருவீதி உலாஆகியவை நடைபெற உள்ளது.

தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பின் 27-ஆம் தேதி காலை 4 மணிக்கு சகல உபசார பூஜையுடன் வாரணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரா் திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்வு நடைபெற உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் சுரேந்தா், அறங்காவலா் குழு தலைவா் சுப்ரமணியம், குழு உறுப்பினா்கள் ஹரிஹரன், ராணி, ராவணன், சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments